பசுவந்தனை (Pasuvanthanai) Inscription - 1245 AD

வரலாறு.காம்

பசுவந்தனைக் கல்வெட்டுகள்

எஸ். இராமச்சந்திரன்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டத்திலமைந்துள்ள பசுவந்தனை கைலாசநாதர் கோயில் பாலமுருகன் திருமுன் திருப்பணியால் சிதறியிருக்கும் கல்வெட்டுத் துண்டுகளை இணைத்துப் படித்தால் தொடர்ச்சி கிடைக்கிறது.

முதற் கல்வெட்டு

இடம்: கருவறை மேற்குக் குமுதம்.

செய்தி: முதுகுடிநாட்டுப் பசுந்தலையன பவித்திரமாணிக்கபுரத்தில், வலங்கை மீகாமீசுவரம் என்ற பெயரில் தனியன் சோறுடையானான ஆலாலசுந்தர பெருமாள் என்பவர் சிவனுக்கு கோயில் எடுப்பித்து நிலமளித்துள்ளார். இக்கொடைப் பராமரிப்புக்கு ஊர் வணிகர் பொறுப்பேற்றனர்.

காலம் : இரண்டாம் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டு - கி.பி.1245.

1-5 பூமலர் திருவும் பொருசெய மடந்தையும் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி

6 திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டியதேவருக்கு யாண்டு நாலாவதின் எதிர் மூவாமாண்டு - -

7 முதுகுடி நாட்டுப் பசுந்தலையான பவித்திரமாணிக்கபுரத்து வலங்கை மீகாமீசுவரமுடைய நாயனார் - - சண்டீசுரப்பிள் - -

8 இவ்வூற் கீழ்கானத்துக் கருஞ்செய் முன்பு தேவதான - - யிட்ட நிலத்துக்கு தெற்கு - - கோவரையர் குடுப் - - எட்டு மாவும் - -

9 க்குடி குலைசேகரச் சிலைசெட்டி கரை நிலத்தில் கீழ் - - லையத்தரையர் பற்று நிலம் நா...... மாவும் தென்கானத்தில் காரி............ க்கு தெற்கு கழனி நாட்டு - -

10 எழுந்தருள்வித்து இக்கோயிலில் திருக்கற்றளியுஞ் செ[ய்*]வி............க்கு மேற்கு தெற்கு நோக்கி - - சூலக் கல்லுட்பட்ட நில - - ஆறு மாவரை ஆக --

11 லு நாட்டிக் குடுத்து மற்றும் இநிலத்தால் வந்த கடமை - - வூர் தனியன் சோறுடையானான ஆ(ல்)லாலசுந்தரப் - - இரைத்திரவியமும் - -

12 டினபடியேய் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் குடுத்தோ - - [சில்]வரி பெருவரியும் மற்றும் இந்நிலத்தால் வந்த வரி எப்[பேர்ப்பட்டனவும்] நாங்களே இறுப்போ - -

13 [ஊ]ராய் இசைந்த நகரத்தோம் ஆ[திச]ண்டேசுர நயணார்க்கும் தனிய[ன் சோறுடை]யானான ஆலாலசுந்தரப் - -

14 யன் எழுந்து நாகன் அ[¨*]ரயனான பல்லந்தரையன் எழுந்து சிரீளங்கோனான கழநிநாட்டு மூவேந்தவேளான் எழுத்து சோதி பெருமாளான குலத் ................. தராயன் எழுந்து ரசிகன் குழைஞ்சானான செம்பிநாட்டு வேளான் எழுந்து திருவா - -

15 மாணிக்கன் பொன்[ன*]னான இளங்கோவரையன் எழுத்து அடையான் செட்டியான சோழபாண்டிய மூவேந்தவேளான் எழுத்து தனியன் கொற்றனான தமிழவேளான் - - நம்பி மிறங்கனான விராடராயன் எழுத்து பெற்றான் செட்டியான தமிழதரையன் எழு - -

16 றயனான முதுகுடிநாட்டு வேளான் எழுத்து வேளான் விளக்கனான பசுந்தலை மூவேந்தவேளான் எழுத்து நகரம் பணிக்க பிடிபாடெழுதினேன் நக[ர*]க் கணக்கு . . . . . . . . ..ருமன் மதியனெ[ன்*] எழுத்து

இரண்டாம் கல்வெட்டு 

இடம்: பாலமுருகன் திருமுன் உள்மண்டபக் குமுதம்.

செய்தி: ஆலாலசுந்தரப்பெருமாள் பற்றிய கட்டளைக் கலித்துறைப் பாடல் (பழிப்பது போலப் புகழ்தல்)

காலம்: கி.பி 1245.

1 ஸ்வஸ்திஸ்ரீ சோறுடையானென்றுஞ் சுந்தரனென்றுந் துங்க வெ[ள்ளை]

2 நீறுடையானெறுஞ் சொல்லுவதுன்னை இந்நீள் புவியில்ப் பேறுடை

3 யாரும் பிறருள்ளாரப் பெரிய கங்கை யாருடையானைப் பசுந்தகையிலே தந்த ஆண்

4 டகையே

மூன்றாம் கல்வெட்டு

இடம்: மேலது

செய்தி: ஆலாலசுந்தரப்பெருமாள் பற்றிய ஆசிரிய விருத்தம். இவர் வணிக குலத்தவர். மாரியம்மன் அருள் பெற்றவர் என்று பாடல் தெரிவிக்கிறது.

காலம்: கி.பி. 1245

1. நிலையாதிவ் வா[ழ்]க்கையென நினைந்தி[ன்]று நிலையான சிவலிங்கஞ் சமைத்து நெல்[லின் வி]

2 லையாலே திருக்கோயில் திருமண்டபந் [தி]ருமேனி திருநடை மாளிகை திருநாள் திரு[வு]

3 ற்[¦]சவ்வன்ஞ் சமைத்தான் அலையாரும் புனல் பசுந்தை அபகாலமாரி அருளிருந்த திரு[வு]ளத்தா னளகை வணிகேசன் துலைய[¡]

4 த பெருஞ்செல்வந் தனியன் சேய் செ[ஞ்]சொற்பதங்கள் தெரிந்தருள் சுந்தர

5 ப்பெருமாள் தானே.

நான்காம் கல்வெட்டு 

இடம்: கைலாசநாதர் கோயில் முதல் திருச்சுற்றில் உள்ள தூண் சிற்பத்தின் மேற்பகுதி.

காலம்: கி.பி. 1861

1 1036 வருடம்1 கு

2 ரோதி வருடம்1 தைய்

3 17உ மீனாட்

4 சிபுரத்திலிருக்

5 கும் நாராயண செ

6 ட்டியார்

7 மகன் சுப்

8 பிரமணிய

9 ப்பிள்ளை

குறிப்பு

1. குறியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

முகப்பு...