|
வரலாறு.காம் |
முக்காணி கல்வெட்டு
எஸ். இராமச்சந்திரன்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள முக்காணியின் தென்மேற்கே, தாமிரபரணி பாலத்தையொட்டி அனுமந்த மூர்த்திக் கோயில் என வழங்கப்படும் சிறிய கோயில் உள்ளது. இக்கோயிலில், கல்தூண் ஒன்றின் மேற்பகுதியில் அனுமன் சிவலிங்கத்தை சுமந்து வரும் காட்சியும், திரிசூல வடிவமும் சித்தரிக்கப்பட்டுள்ளன. சிற்பத்தின் கீழே தொடங்கும் கல்வெட்டு தூணின் மற்ற மூன்று பக்கங்களிலும் தொடர்கிறது.
இடம்: அனுமந்த மூர்த்தி கோயில் கல்தூண்.
செய்தி: இராமேசுவரத்திலுள்ள இராமசாமி திருக்கோயிலுக்கு இப்பகுதியிலுள்ள சகல சமுதாயத்தினரும் கட்டளைக் குடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காலம்: இராணி மங்கம்மாள். கி.பி. 1693.
1 ராம
2 சேது
3 86
4 8[வருடம்] மா
5 சி[மாதம்] 72
6 ராமலி
7 ங்கசு
8 வாமி
9 சேது
10 தற்ம
11 த்துக்கு
12 கற்த்தா
13 க்கள் க
14 ட்டளை
15 யிட்ட மு
16 க் காணி
17 வடகரை
18 ப் பழைய
19 மானி[ய]ம்
20 கொற்
21 க இன்னா
22 ன் கெல்
23 கைக்கு
24 ள்ப்பட்ட
25 சகல ச
26 மதாய
27 த்துக்கும்
28 அகிதம்
29 பண்ணி
30 னவர்க
31 ள் கெங்
32 கைக் கரை
33 யிலும்
34 சதுக் க
35 ரயிலும்
36 மாதா
37 பிதாவை
38 யும் காராம்
39 பசுவை
40 யும் கொ
41 ன்ற தோ
42 ஷத்திலே
43 பாவாரா
44 கவும்