மணக்கரை (Manakkarai) Inscription - 1495 AD

வரலாறு.காம்

மணக்கரைக் கல்வெட்டுகள்

எஸ். இராமச்சந்திரன்

முதற் கல்வெட்டு

இடம்: தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம் மணக்கரைக் கிருஷ்ணன் கோயில் கருவறை மேற்குச்சுவர்

செய்தி: அரசர் (திருவிதாங்கூர் அரசராகலாம்), சீவலவன் மங்கலத்திலுள்ள, பராந்தீசுவரம் என்ற கோயிலில் இருந்து கொண்டு இவ்வாணையைப் பிறப்பித்துள்ளார். சீவலவன் மங்கலத்தின் மேற்பிடாகையான மணக்கரையில் கிருஷ்ணன் கோயிலுக்குரிய நிலங்களைச் சார்ந்து வாழும் முதற் குடிகளாகச் சிலரை அரசர் நியமித்தார். கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.

காலம்: கி.பி.1495.

1 கொல்லம் 670 காத்
2 திகை மாதம்1 22 உ சீவலவன்
3 மங்கலத்தில் பராந்தீசுவரத்தி
4 ல் எழுந்தருளி இருந்தருள
5 மேல்பிடாகை மணக்கரை
6 நயினார் சீகிட்டிணன் கோ
7 யிலுக்கு முதல் குடி ஆக
8 செந்திப் பெருமாளும் இவன்
9 மகன் ஆருமுகப் பெருமாளும் உ
10 ள்ளிட்டாரை துரம்2 செய்யக் கற்பித்


இரண்டாம் கல்வெட்டு

இடம்: மணக்கரைச் சொக்கநாதர் கோயில் முன்மண்டப நுழைவாயில் தளம்.

காலம்: கி.பி. பதினாறாம் நூற்றண்டாகலாம்.

1 முத்தாலங்குறிச்சி
2 உடையாங்குட்டி சத
3 ¡ சேவை

மூன்றாம் கல்வெட்டு

இடம்: சொக்கநாதர் கோயில் மகா மண்டபத் தூணிலுள்ள சிற்பத்தின் மேற்பகுதி.

காலம்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டாகலாம்.

1 புங்கத்
2 துடைய
3 ¡ர் சதா
4 சேவை

நான்காம் கல்வெட்டு

இடம் : மேற்குறித்த மண்டபத்தின் மற்றொரு தூணிலுள்ள சிற்பத்தின் மேற்பகுதி.

காலம் : கி.பி. பதினாறாம் நூற்றாண்டாகலாம்.

1 இளைய
2 பெருமாள்
3 வேலா
4 யுதப் ¦
5 பரும
6 ¡ள் ச
7 தா சேவை

ஐந்தாம் கல்வெட்டு

இடம்: மேற்குறித்த மண்டபத்தின் மற்றொரு தூணிலுள்ள சிற்பத்தின் மேற்பகுதி.

காலம்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டாகலாம்.

1 பருவு
2 டப்பி
3 ள்ளை
4 சதா சே
5 வை

ஆறாம் கல்வெட்டு

இடம்: மகாமண்டபத்தின் தென்கிழக்கே, கிணற்றருகே உள்ள தளம்.

காலம்: கி.பி. பதினேழாம் நூற்றாண்டாகலாம்.

1 அசை
2 ந்தாடும்
3 பெருமா
4 பிள்ளை
5 அய்யன்
6 புண்ணி
7 ய ம[¡*]க சு
8 வாமி க
9 ரியமாணி
10 க்கப் பெரு
11 மாளுக்கு
12 தோப்பு

குறிப்பு
1. குறியீட்டில் தரப்பட்டுள்ளது
2. பொறுப்பாக்குதல் அல்லது நியமனம் செய்தல்

முகப்பு...