கொல்லன் பொற்றை (Kollan PoRRai)

வரலாறு.காம்

கொல்லன் பொற்றைக் கல்வெட்டு

எஸ். இராமச்சந்திரன்


இடம்: நெல்லை கட்டபொம்மன் மாவட்டம், தென்காசி வட்டம், குத்துக்கல்வலசை என்ற ஊருக்கு அருகில் கொல்லன் பொற்றை என்ற பாறை உள்ளது. மைனர் நாடார் தோப்பு என வழங்கப்படும் இப்பகுதியில், தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் கசிவு நீர்க்குட்டைக்கு அருகில், பாறையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பெரிய நாச்சியார்க்குப் பூஞ்சேரிப் பற்றில் கொள்ளப்பட்ட தேவதான நிலம் பற்றிய குறிப்பு உள்ளது. வைகுந்த வளநாடும் கருமாணிக்கத்தாழ்வாரும் பொருந்தும் விதம் எண்ணி மகிழ்தற்குறியது. கல்வெட்டின் பிற்பகுதி பெரிதும் சிதைந்திருப்பதால் முழுமையான செய்தியை அறியக்கூடவில்லை.

காலம்: கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.

1 ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலசேகர
         தேவற்கு யாண்டு ......... மாசி மாதம் நாள் 5

2 திருக்குற்றாலத்து மாசபை ஸ்ரீவயிகுந்த வளநாட்டுப் பெரும் பழஞ்சிக்குடி
          நாயனார் கருமாணிக்கத்தாழ்வார் உடையார் திருகுற்றாலமுடைய நாயனார்

3  கோயில் திருமாக்கோட்டத்துப் பெரிய நாச்சியார்க்கு தேவதானமாக
           பூஞ்சேரி பற்றில் கொண்டிட்ட..........

4  திருச்சூலக்கல்.......  கடவிட்ட நன்செய் ......  ண்டு சேரவும் --

5  -- இக்கடமை ஆகக்கொள்ளக் கடவதாக -- களக்குடியார் --


முகப்பு...